2025 ஜூலை 16, புதன்கிழமை

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுசபை கூடியது

Thipaan   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை இன்று (06) காலை  வவுனியா நகரசபை மண்டபத்தில் கூடியுள்ளது.

இலங்கையில் பழம்பெரும் கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இன்று பொதுச்சபை கூடி புதிய நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் ஆரம்பமாகிய இன்றை நிகழ்வுகளில் மங்கள விளக்கேற்றல் கட்சி கீதம் மற்றுமு; தமிழ் தாய் கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

பொதுச்சபையில் அங்கம் வகிக்கும் 160 உறுப்பினர்கள் இதன் போது கலந்து கொண்டு தமது கட்சியின் புதிய நிர்வாகத்தை தெரிவு செய்யவுள்ளனர்.
இதேவேளை கட்சியின் வரலாறுகள் தொடர்பாக புகைப்பட கண்காட்சியும் மண்டபத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X