2025 ஜூலை 14, திங்கட்கிழமை

உணவகத்தை அடித்து நொறுக்கியவருக்கு பிணை

Thipaan   / 2015 ஜனவரி 13 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைந்துள்ள உணவகமொன்றை அடித்து நொறுக்கிய சந்தேகநபரை 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், திங்கட்கிழமை (12) அனுமதியளித்தார்.

அத்துடன், வழக்குத் தவணையை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

சந்தேகநபர் கடந்த 9ஆம் திகதி உணவகத்தை அடித்து நொறுக்கி 1 இலட்சத்து 300 ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமாக்கியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார் சந்தேகநபரை திங்கட்கிழமை (12) கைது செய்தனர்.
 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .