2025 ஜூலை 14, திங்கட்கிழமை

காணாமல் போனோர் தொடர்பில் கவனம் செலுத்துங்கள்; பாப்பரசரிடம் கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 13 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


காணாமல் போனோர் தொடர்பில் பரிசுத்த பாப்பரசர் கவனம் செலுத்தி கேள்வி எழுப்புங்கள் என்று கோரி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம்  வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை  (13) நடைபெற்றது.

காணாமல் போனோரின் உறவுகளை ஒன்றிணைத்து வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு ஏற்பாடு செய்த இந்த  கவனயீர்ப்பு போராட்டத்தில், காணாமல் போனோரின் உறவினர்கள்  பலர் கலந்துகொண்டனர். இதன்போது  இவர்கள்  பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

இதன்போது, 'திருத்தந்தையே அடிமைப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீது கருணை காட்டுங்கள்', 'அதிவணக்கத்துக்குரிய திருத்தந்தையே தடுப்புக்காவலில் உள்ள எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள்', 'திருத்தந்தையே உங்கள் பாதம் பதியும் இடம் புனிதமாக இருக்கவேண்டும்', 'கடத்தப்பட்டு, காணாமல்போன பிள்ளைகளை தேடி அலைகின்றோம் எங்களுக்கு ஆறுதல் தாருங்கள் தந்தையே' உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை இவர்கள் தாங்கியிருந்தனர்.

பின்னர்,  இவர்கள் மடு திருத்தலத்துக்கான பயணத்தை மேற்கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .