2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஜப்பான் நிதியுதவியில் கிளிநொச்சி ஆரம்ப பாடசாலைக்கு புதிய கட்டடம்: வலயக்கல்விப் பணிப்பாளர்

George   / 2015 ஜனவரி 14 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

கிளிநொச்சி மத்திய, ஆரம்ப பாடசாலைக்கு ஜப்பான் அரசின் 20 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் 12 வகுப்பறைகளைக் கொண்ட கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி வலயக் கல்வி பணிப்பாளர் க.முருகவேள் தெரிவித்தார். 

கிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலையில் தரம் 01 முதல் தரம் 05 வரையான வகுப்புக்களில் சுமார் 798 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். 

6 வகுப்பறைகள் தற்காலிக கொட்டகைகளிலும், 04 வகுப்பறைகள் மர நிழல்களிலும் இடம்பெற்று வருகின்றன. 

இந்நிலையில் தமது பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளுக்கு ஏற்ற கட்டட வசதிகளை ஏற்படுத்தி தருமாறு மாணவர்களின் பெற்றோர்கள் வலயக்கல்விப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இது தொடர்பாக வலயக் கல்விப்பணிப்பாளர் க.முருகவேளினை தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அவர் தொடர்ந்து கூறுகையில், வகுப்பறைக் கட்டடம் அமைக்கும் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கட்டிடம் அமைக்கும் பணிகள் முடிவடையும் வரையில் தற்காலிகமாக வகுப்பறைகளை அமைத்து கொடுக்கும் மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளது. 

இந்த வருட நடுப்பகுதிக்குள் இப்பாடசாலையின் தேவைகள் நிறைவு செய்யப்படும் என அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .