2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அக்கராயனில் கிராமிய நீர்வழங்கல் திட்டம்

Menaka Mookandi   / 2015 ஜனவரி 15 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் கிராமிய நீர்வழங்கல் மற்றும் சுகாதாரத்திட்டம் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் நெருக்கடி நிலவும் பகுதிகளில் ஒன்றாக காணப்படும் அக்கராயன் பிரதேசத்தின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்ததிட்டத்தில், கிணறு ஒன்று அமைக்கப்பட்டு, 30 மீற்றர் கனஅடி நீர் கொள்ளவு கொண்ட நீர்த்தாங்கி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகம் செய்வதற்கான விநியோகக் குழாய்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தத்திட்டம் அடுத்த மாதமளவில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் 300 குடும்பங்களுக்கான குடிநீர் தேவையை நிறைவு செய்ய முடியும்.

இந்தத்திட்டத்துடன் இணைத்து 90 பயனாளிகளுக்கான மலசலகூடங்கள் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. கட்டம் கட்டமாக ஒவ்வொரு பணியும் பல்வேறு நிதி மூலங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .