2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வாகனம் சோதனையிடப்பட்டமை குறித்து அனந்தி விசனம்

Sudharshini   / 2015 ஜனவரி 15 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

காணாமல் போனோரின் உறவினர்களுடன் பாப்பரசரின் ஆராதனைகளில் கலந்துகொள்வதற்காக செவ்வாய்க்கிழமை (13) மடுதிருதலத்துக்கு சென்றிருந்த போது, தனது வாகனத்தை புலனாய்வு பிரிவினர் புகைப்படம் எடுத்ததுடன் சாரதியிடமும் விசாரணை நடத்தியமை குறித்து வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று வியாழக்கிழமை(15) விசனம் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோரின் உறவினர்கள் பாப்பரசரின் ஆராதனைகளில் கலந்துகொள்வதுக்கு மடு திருத்தலத்துக்கு சென்றிருந்தனர். அவர்களுடன் காணாமல் போனோரின் உறவினர் என்ற வகையில் நானும் எனது இரு குழந்தைகளும் மடு திருத்தலத்துக்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை (13) சென்றிருந்தோம்.

அன்றைய தினம் தட்சனாமருதமடுவில் தங்கியிருந்து மறுநாளான புதன்கிழமை (14) காணாமல் பேனோரின் உறவினர்களின் குழுவுடன் இணைந்து ஆராதனைகளில் கலந்துகொள்ள எண்ணியிருந்தேன்.

இந்நிலையில், அச்சுறுத்தல் காரணமாக தங்குவதுக்கு ஏற்பாடு செய்திருந்த இடத்தில் தங்க முடியாமல், அன்றிரவு முழுவதும் மரத்தின் கீழ் தங்கியிருந்து மறுநாள் எமது குழுவுடன் இணைய வேண்டிய நிலை ஏற்பட்டது.

புதிய அட்சி என சொல்லிக்கொள்பவர்கள் தொடரும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில், தீவிர கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.


 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .