2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அக்கராயன் ஆற்றில் மண் கொள்ளை

Kogilavani   / 2015 ஜனவரி 15 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நடராசா கிருஸ்ணகுமார்


கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் ஆற்றுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான மண் அகழ்வால் பாரிய சூழலியல் பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அக்கராயன் ஆறு 7 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து குடமுருட்டி ஆற்றுடன் இணைகின்றது. இந்த ஆற்றுப்பகுதியில் நாள்தோறும் நடைபெறும் மண் அகழ்வால் ஆற்றுப் பகுதியிலுள்ள அக்கராயன் மத்தியப்பகுதி, அக்கராயன் கிழக்குப்பகுதி, ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம் ஆகிய கிராமங்களின் நிலத்தடிநீர் பெரும் ஆபத்;தை எதிர்நோக்கியுள்ளது.

அக்கராயன்மத்தி என்பது கடல் மட்டத்திலிருந்து 115 அடிக்கு மேலான உயர்வான பகுதியாகும்.

மேற்படி பகுதிகளில் நிலத்தடி நீரை தக்கவைப்பதில் அக்கராயன் ஆறு முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், தற்போது அக்கராயன் ஆற்றுப்பகுதியில் களவாக நடைபெறும் மண் அகழ்வு காரணமாக எதிர்காலத்தில் அக்கராயனில் பல பகுதிகள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்றது.

அக்கராயன் குளத்தின் கீழான வயல்நிலங்கள் நெற்செய்கையை மேற்கொள்ளமுடியாத உவர்நிலங்களாக மாறும் அபாயம் காணப்படுகின்றது.
 
இதுதொடர்பாக கிளிநொச்சி பொலிஸாரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது,

அக்கராயன் ஆற்றுப்பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. அதனை மீறி ஆற்றுப்பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்து வருகின்றோம். மண் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் காட்டுப்பக்கமாக வருகை தந்து மணல் அள்ளிச் செல்கின்றனர் எனத்தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .