2025 ஜூலை 14, திங்கட்கிழமை

புனரமைக்கப்படாத நிலையிலிருக்கும் முல்லைத்தீவுக் கட்டடங்கள்

Kogilavani   / 2015 ஜனவரி 16 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நடராசா கிருஸ்ணகுமார்

சுனாமி ஆழிப்பேரலையாலும், 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தாலும் அழிவடைந்த முல்லைத்தீவு நகரத்திலுள்ள வீடுகள் மற்றும் தனியார், பொதுக்கட்டடங்கள் மீளப் புனரமைக்கப்படாத நிலையில் உள்ளன.

யுத்தம் காரணமாக, 1990ஆம் ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டு வரை முல்லைத்தீவு நகரிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.

தொடர்ந்து 1996ஆம் ஆண்டு முல்லைத்தீவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து, பொதுமக்கள் இங்கு மீள்குடியேறினர்.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையால் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல கட்டடங்கள் அழிவடைந்தன. அவற்றை மீண்டும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

இந்நிலையில், 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் பல கட்டடங்கள் அழிக்கப்பட்டன. தற்போது முல்லைத்தீவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள போதும், அங்கு அழிவடைந்த பல கட்டடங்களை மீள்நிர்மாணம் செய்வதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை.

எனினும், தேவைக்கேற்ப பொதுக்கட்டடங்கள் புனரமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .