2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நீலியாமோட்டையில் யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு

Thipaan   / 2015 ஜனவரி 17 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள நீலியாமோட்டை கிராமத்தில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அக் கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

68 குடும்பங்கள் வசிக்கும் இக் கிராமத்தை சூழ காட்டுப்பகுதியாக காணப்படுவதனால் யானைகள் மற்றும்; காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக இக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை மாணவர்கள் உட்பட கூலி வேலைக்கு செல்பவர்களும் யானைகளினால் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மின்சார வசதிகள் பூரணப்படுத்தப்படாமையால் இப் பகுதியில் இரவு வேளையில் வரும் யானைகளை அடையாளம் காணமுடியாதுள்ளதாகவும் அவ் வேளையில் வீட்டில் உள்ள பயிர்களையும் விவசாய நிலங்களும் யானைகள் நாசம் செய்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையினால் பெண்ணொருவரை யானை தாக்கியுள்ளதாகவும் தொவிக்கின்றனர்.

எனவே தமது கிராமத்தை சூழ மின்சார வேலிகளை அமைத்து தருமாறு உரிய அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .