2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கோணாவிலில் மேய்ச்சல் தரவை இல்லை

Menaka Mookandi   / 2015 ஜனவரி 18 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நடராசா கிருஸ்ணமூர்த்தி

கிளிநொச்சி, கோணாவில் கிராமத்தில் கால்நடைகள் வளர்ப்போர், அவற்றுக்கான மேய்ச்சல் தரவைகள் இல்லாமையால் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்தக் கிராமத்தில் வசிக்கின்ற 1,100 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் கால்நடை வளர்ப்பை தங்கள் வாழ்வாதார தொழிலாகக் கொண்டுள்ளனர். இந்தக் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட கால்நடைகள் காணப்படுகின்றன.

அக்கராயன் குளத்தின் கீழ் தற்போது காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதன் காரணமாக மேற்குறித்த கால்நடைகளை மேய்ச்சலில் ஈடுபடுத்துவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

கோணாவிலை சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள் அண்மைக் காலமாக துணுக்காய் அமதிபுரம் பகுதிக்கு தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றனர். எனினும் அமதிபுரம் காட்டுப்பகுதியில் சிறிய மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதால் அங்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடவேண்டாம் என வனவளத் திணைக்களம்; தடை விதித்துள்ளது.

இந்தப் பிரச்சினை தொடர்பில் அண்மையில் நடைபெற்ற கரைச்சி பிரதேச செயலக பிரதேச அபிவிருத்திக் கூட்டம், மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் என்பவற்றில் சுட்டிக்காட்டப்பட்ட போதும், தரவை நிலங்களை இனங்கண்டு கொடுப்பதற்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .