2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பூநகரி பிரதேச செயலக கட்டட நிதி, திறைசேரிக்கு திரும்பியது

Menaka Mookandi   / 2015 ஜனவரி 20 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நடராசா கிருஸ்ணகுமார்


கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்துக்கு நிரந்தர கட்டடம் நிர்மாணிப்பதற்காகக் கிடைத்த 50 மில்லியன் ரூபாய் நிதியில் 36 மில்லியன் ரூபாய், திறைசேரிக்கு திரும்பிச் சென்றுள்ளதாக பூநகரி பிரதேச செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் செவ்வாய்க்கிழமை (20) தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில், 'கிளிநொச்சி மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர், பூநகரி பிரதேச செயலக பிரிவிலே மக்கள் முதலில் மீளக்குடியமர்ந்தனர்.

மீள்குடியேற்றம் நடைபெற்றதையடுத்து, பூநகரி பிரதேச செயலகத்துக்கான நிரந்தர கட்டிடம் அமைக்கும் பணிகள் பூநகரி வாடியடிப் பகுதியில் என்.ரி.எப் திட்டத்தின் கீழ் 50 மில்லியன் ரூபாய் செலவில் 2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது' என்பதை நினைவுபடுத்தினார்.

'கட்டிட வேலைகளில் ஈடுபட்ட ஒப்பந்தக்காரர்கள்  உரிய காலத்தில் முடிக்காமையினால் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான வேலை மட்டுமே முடிவடைந்தது. மிகுதி நிதி திரும்பிச் சென்றுவிட்டது.

இதனால் கட்டட வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நிதி கிடைக்கும் பட்சத்திலேயே மிகுதி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்' என்று அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .