2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பாதசாரிகளை அலட்சியம் செய்தவருக்கு அபராதம்

George   / 2015 ஜனவரி 20 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 


கிளிநொச்சி நகர் பகுதியிலுள்ள பாதசாரிகள் கடவையில, பாதசாரிகள் கடந்த சென்றதை அலட்சியம் செய்து மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபருக்கு 3,000 ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், திங்கட்கிழமை(20) உத்தரவிட்டார்.


குறித்த நபரை கடந்த 2ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸார் கைது செய்து, பொலிஸ் பிணையில் விடுவித்ததுடன் அவருக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

 

இந்த வழக்கு, திங்கட்கிழமை (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து நீதவான் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


இதேவேளை, துவிச்சக்கரவண்டியில் சென்ற குடும்ப உறுப்பினர்களை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு 4,500 ரூபாய் அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார். 


கடந்த 3ஆம் திகதி கிளிநொச்சி நகர்ப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மூவர் சிறுகாயங்களுக்குள்ளாகியிருந்தனர். 


மோதிய நபர், கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .