Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஜனவரி 20 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
அரசியல் பிற்போக்கு கொண்ட சக்திகள் மீண்டும், குறிப்பாக வடக்கில் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்பட்டுவரும் நல்லுறவில், விரிசல்களை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பமான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, செட்டிகுளம், நானாட்டான், முசலி, மாந்தை மேற்ககு, மாந்தை கிழக்கு பிரதேச சபைகள் மற்றும் மன்னார் நகரசபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள், செவ்வாய்க்கிழமை (20) கூட்டாக விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'தற்போது எமது நாட்டில் நல்லாட்சியொன்றினை எற்படுத்தும் வகையில் கட்சி பேதங்களை மறந்து அனைத்து இனத்தவர்களும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ள நிலையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட சில ஊடகங்கள் இவர்கள் தொடர்பில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 30 வருட யுத்தத்தின் பின்னரான காலத்தில், வடக்கில் வாழும் அனைத்து மக்களது வாழ்வு மேம்பாடு தொடர்பில், வன்னி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் அதிகப்படியான வாக்குகளால் நாடாளுமன்றம் சென்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இம்மக்களுக்கு இன்றும் அளப்பறிய பணியினை ஆற்றிவருகின்றார்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், மீண்டும் மக்களுக்கு மத்தியில் சென்று அவர்களை இன ரீதியான பிளவுகளுக்கு வித்திடுகின்ற பணியில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் தான், நாம் இந்த அறிக்கையினை வெளியிட நேரிட்டுள்ளது.
சில அரசியல்வாதிகள் தாங்கள் வந்த பாதையை மறந்து, அவர்களது வாய்க்கு வருகின்ற முறையற்ற வார்த்தைகளை பாவிப்பது ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிருப்தியினை எற்படுத்தியுள்ளது.
அவ்வாறானவர்கள் தமது இயலாத்தன்மையை மறைத்துக் கொள்ளும் வகையில், தாங்கள் மட்டுமே வடக்கிலும் அதற்கு வெளியிலும் தமிழ் பேசும் மக்களது அனைத்து வாக்குகளையும் பெற்றுக் கொடுதத்ததாக தம்பட்டம் அடிப்பதிலிருதே அரசியலின் வங்குரோத்து நிலையினை காணமுடிகின்றது' என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
13 Jul 2025
13 Jul 2025
13 Jul 2025