2025 ஜூலை 14, திங்கட்கிழமை

காணி உறுதிப்பத்திரம் வழங்குமாறு போராட்டம்

Menaka Mookandi   / 2015 ஜனவரி 28 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு பின்பக்கமாகவுள்ள இரத்தினபுரம் ஆற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வீட்டுத்திட்டத்தில் உள்வாங்குமாறு கோரி புதன்கிழமை (28)  ஆர்ப்பாட்டம் செய்தனர்.  

அந்தக் கிராமத்தில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றிணைந்து கிராமத்திலிருந்து ஊர்வலமாக ஆரம்பித்து மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக  ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தாங்கள் குடியிருக்கும் காணிகளுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கவேண்டும். புதிய அரசாங்கம் எங்களுக்கு நியாயமான முடிவை கொடுக்க வேண்டும், எமது பிரதேச பிரதேச செயலாளரை மாற்ற வேண்டும், மக்களை ஏமாற்றும் அரச அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும், வீட்டுத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இந்தப் பிரச்சினை தொடர்பில் மாவட்டச் செயலாளர் கருத்து கூறுகையில், 'கிளிநொச்சி குளம், அதன் பின்பகுதி, இரத்தினபுரம் ஆற்றுப்பகுதிகளிலுள்ள பொதுக்காணிகளில் பொதுமக்கள் சிலர் குடியேறி வசித்து வருகின்றனர். அவர்கள் அந்தக் காணிகளை தங்களுக்கு என்று வழங்கி காணி உறுதிகள் வழங்கும்படி கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.

அவர்களில் இரத்தினபுரம் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தி, மகஜர் ஒன்றை தந்துள்ளனர். இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடி நியாயத்தன்மை மற்றும் பாதிப்புக்கள் குறித்த ஆராய்ந்து இதற்குரிய சரியான முடிவை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .