2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தமிழினம் கல்வியால் உலகறியப்பட்டது: அடைக்கலநாதன்

Menaka Mookandi   / 2015 ஜனவரி 29 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

தமிழர்கள் தங்கள் கல்வி அறிவின் மூலம் தங்களை உலகறியச் செய்ததுடன், தங்கள் உரிமைகள் மற்றும் தேவைகளை அதன்மூலம் கேட்டறியவும் செய்தனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு, பாண்டியக்குளம் ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி, பாடசாலை மைதானத்தில் புதன்கிழமை (28) நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 'தமிழ் மக்களின் கல்வி தான் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்துள்ளது. எமது கல்வியறிவை கைவிடாது தொடர்ந்து நாங்கள் சிறந்த கல்வியாளர்களாக விளங்கவேண்டும். கல்வி தான் எங்களுடைய சொத்து.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற அழிவுக்கள் அட்டூழியங்கள் தொடர்பில் ஐ.நா விசாரணை நடைபெறுகின்றது. அது காலதாமதமின்றி நடைபெறவேண்டும். கடந்த ஜனாதிபதி தேர்தல் எமது வல்லமையைக் காட்டி ஆட்சியை மாற்றி அமைத்தோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .