Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 ஜனவரி 29 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
சமுர்த்தி கொடுப்பனவு, நிவாரணங்கள் வழங்குவதில் உள்ள அரசியல் பாகுபாடு காரணமாக வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பலர் இந்த உதவிகளை பெற முடியாத நிலையில் உள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் ஏ.மெரினஸ் பெரேரா, வியாழக்கிழமை (29) தெரிவித்தார்.
கடல் வெள்ள நீர் உட்புகுதல் தொடர்பாக மன்னார் பள்ளிமுனை கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகர சபை உறுப்பினர்கள் மேற்கொண்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தின் சமுர்த்தி நியமனத்தில் பாரிய முறைகேடுகளும் அநீதிகளும் இழைக்கப்பட்டுள்ளன. சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் 90 சத வீதத்துக்கும் அதிகமானோர் அரசியலில் பயன்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் பிரதேச செயலாளர்களுக்கும் கட்டுப்படாத தன்மையே காணப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் கொண்டுவரப்பட்ட இத்திட்டம் வடக்கில், மன்னார் மாவட்டத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அமுல்படுத்தப்பட்டது.
சமுர்த்திக்கென தனியான அமைச்சர் இருந்த போதும் இங்கு வேறொரு அமைச்சர் மூலம் நியமனங்கள் வழங்கப்பட்டன. பொது அறிவித்தல்களோ நேர்முகப்பரீட்சைகளோ இல்லாமல் தகுதியில்லாத பலர் அரசியல் ரீதியாக உள்வாங்கப்பட்டு சமுர்த்தி நியமனத்தின் தன்மை பற்றி அறியாமல் அரசியல் கட்சிகளுக்கு ஆட்களை பிடிப்பது மட்டும் இல்லாது மக்களையும் பிழையான வழியில் நடத்துகின்றனர்.
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்காக அரசினால் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தினை தனி மனித அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்துகின்றார்கள்.
இதற்கெல்லம் காரணம் உரிய துறைசார் அமைச்சர்கள் இப்பகுதிகளுக்கு வராமல் விடுவதும், இப்பகுதியைச் சேர்ந்த அமைச்சரே அனைத்துத் துறைகளிலும் சம்மந்தம் இல்லாது அதிகாரம் செலுத்துவதுமே ஆகும்.
எனவே, புதிய அரசியற்துறைக்கு பொறுப்பான அமைச்சரில் நாமும் மக்களும் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல மாற்றங்களை செய்வதனூடாக உரிய அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரைகளை வழங்கி மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
6 hours ago
6 hours ago
6 hours ago