2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முகமாலையில் வெடிபொருள் அகற்றுவதை மேற்பார்வை செய்த பிரிட்டன் அமைச்சர்

Menaka Mookandi   / 2015 ஜனவரி 30 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முகாமாலை பகுதியில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வரும் பகுதிகளை பிரித்தானியாவின் வெளிநாட்டு பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹூகோ ஸ்வையர் உள்ளிட்ட குழுவினர் வியாழக்கிழமை (30) பார்வையிட்டார்.

வடக்குக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்த இந்தக் குழுவினர் முகாமாலைக்கு சென்று பார்வையிட்டனர்.

யுத்தம் உக்கிரமாக நடந்த பகுதிகளில் முகாமாலைப் பகுதி குறிப்பிட்டுக் காட்டக்கூடிய ஒரு பகுதியாகும். இப்பகுதியில் பெருமளவு வெடிபொருட்கள் இருப்பதால் அதனை அகற்றும் பணிகள் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெடிபொருட்கள் அகற்றப்படாமையால் இப்பகுதியில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .