2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி மன்னாரிற்கு விஜயம்

George   / 2015 ஜனவரி 31 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

திருத்தந்தை பிரான்சிஸின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பியரே நியு ஜென்வன் ரொட், வெள்ளிக்கிழமை (30) மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
 
திருத்தந்தையின் பிரதிநிதிக்கு மன்னார் மறைமாவட்டத்தின் சார்பில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.
 
மன்னார் பிரதான பாலத்தில் இருந்து திறந்த வாகனத்தில் மக்களால் பவனியாக அழைத்தச்செல்லப்பட்ட இவர் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தை சென்றடைந்தார். அங்கு 'இயேசுவே ஆண்டவர்' மண்டபத்தில் சிறப்பு நற்கருணை ஆராதனையில் ஈடுபட்டார்.
 
கத்தோலிக்க திருச்சபையின் தாய் மொழியாகிய இலத்தின் மொழியில் ஆராதனையினை நடாத்திய பேராயர் இறுதியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நற்கருணை ஆசீரை வழங்கியுள்ளார்.
 
மேற்படி நிகழ்வுகளில் மன்னார் ஆயர் இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகை, மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் உள்ளிட்ட அருட்தந்தையர் மற்றும் அருட்சகோதரிகளும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .