Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி புதுமுறிப்பு பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயொருவர் மீது இனந்தெரியாத நபர்கள், ஞாயிற்றுக்கிழமை(01) கத்தியால் குத்தியதில் அப்பெண் படுகாயமடைந்து, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
ஆர்.ராகினி (வயது 32) என்ற பெண்ணே இவ்வாறு கத்திகுத்துக்கு இலக்காகியுள்ளார்.
கடைக்குத் சென்று திரும்பி வந்துகொண்டிருந்தபோது, குறித்த பெண்ணை வழிமறித்த மூவர், கத்தியால் குத்திவிட்டுச் சென்றுவிட்டனர்.
இதில் நெஞ்சு மற்றும் கழுத்தில் படுகாயமடைந்த பெண், முதலில் அக்கராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
யுத்தத்தில் கணவனை இழந்த இந்த பெண், தனது இரண்டு பிள்ளைகளுடன் தனிமையில் வசித்து வருகையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் பெண்ணின் வீடு இனந்தெரியாதவர்களால் இரண்டு தடவைகள் தீக்கிரையாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தற்போது கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. கத்தியால் குத்தியவர்களில் ஒருவரை பெண் அடையாளங்காட்டியுள்ள நிலையில், விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கிளிநொச்சி பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
3 hours ago