2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நகுலேஸ்வரன் கொலை வழக்கு 16ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், வெள்ளாங்குளத்தில் வசித்து வந்த முன்னாள் போராளியான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நபர் ஒருவரை எதிர்வரும் 14 தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

வெள்ளாங்குளத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நகுலேஸ்வரன் கடந்த 12.11.2014 அன்று இரவு 8.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இவரது கொலை தொடர்பில் குறித்த பகுதி கிராம சேவையாளர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் மன்னார் நீதவான் நீதிமன்றத்திலும் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இவர்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கான எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் குறித்த ஏழு பேரில் நால்வர் குற்றமற்றவர்கள் என கருதி குறித்த 4 பேரை கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

எனினும் கிராமசேவகர் உட்பட மூவரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. குறித்த மூவரில் இருவரை புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளுக்கு உட்படுத்துமாறும் மற்ற நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .