2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அம்பலப்பெருமாள் குளத்தை புனரமைப்பு செய்ய 25 மில்லியன் நிதி தேவை

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு அம்பலப்பெருமாள் குளத்தின் மிகுதி புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு 25 மில்லியன் ரூபாய் தேவையெனக் கோரி, முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் ஊடாக வடமாகாண விவசாய அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பொறியிலாளர் பாக்கியராசா விகர்ணன் வியாழக்கிழமை (04) தெரிவித்தார்.

என்.டி.எப் திட்டத்தின் கீழ் 50 மில்லியன் ரூபாய் செலவில் இந்தக் குளத்தின் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஒப்பந்தக்காரர்களின் இழுத்தடிப்புக் காரணமாக 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான வேலைகள் பூர்த்தியடைந்த நிலையில் புனரமைப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

குளத்தில் அலைகற்கள் அடுக்கப்பட்டுள்ளன. குளத்தின் அணைக்கட்டுக்கு குவிக்கப்பட்ட மண் மழைக்கு கரைந்து குளத்தின் உட்பகுதியினை அடைந்துள்ளன. குளத்தின் வான்பகுதி மற்றும் வாய்க்கால்கள் என்பன புனரமைக்கப்பட வேண்டியுள்ளன.

இதுவரையில் புனரமைத்த குளத்தின் நீரைக் கொண்டு 600 ஏக்கர் நிலப்பரப்புக்கு மாத்திரம் விவசாயம் மேற்கொள்ள முடியும்.  கோரிக்கை விடுத்த நிதியுதவி கிடைத்தவுடன் அம்பலப்பெருமாள் குளம் முழுமையாக புனரமைக்கப்படும்.

இந்தக் குளம் புனரமைக்கப்படும் போது 900 ஏக்கர் வரையான நிலப்பரப்புக்கு நீர்ப்பாசனம் செய்யப்படும். தற்போது இக்கிராமத்தில் சுமார் 110 குடும்பங்கள் இக்குளத்தை நம்பி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .