2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இரணைமாதா நகர் மீனவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

றோலர் படகு மீன்பிடியை முற்றாகத் தடை செய்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு கிளிநொச்சி இரணைமாதாநகர் கிராமிய கடற்றொழில் அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புதன்கிழமை (04) கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எமது இலங்கையில் இழுவைப் படகுத் தொழில் தடை செய்யப்பட்ட தொழிலாகும். இதனால் எமது வாழ்வாதாரம் மேம்படுவதற்கும் கடல் வளம் பாதுகாப்பதற்கும் நிம்மதியான வாழ்வுக்கும் வழி கிடைத்திருந்தது.

தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் மூலம் எமக்கான நல்லாட்சியும், எமது வாழ்வை மேம்படுத்தக்கூடிய நல்லாட்சித் திட்டங்களும் காணப்படுவதால் மலர்ந்துள்ள இந்த ஆட்சியை நாம் மனப்பூர்வமாக வரவேற்கின்றோம். எமது கடற்பரப்பில் தடை செய்யப்பட்டிருந்த இழுவைப் படகுத் தொழில் மீண்டும் தலைதூக்கிக் காணப்படுகின்றது.

இழுவை படகுகளில் அத்துமீறிய தொழில் நடவடிக்கையால், எமது பல இலட்சம் பெறுமதியான தொழில் உபகரணங்கள் அழித்து செல்வதானலும், எமது கடற்பரப்பில் காணப்படுகின்ற கடல்வளங்கள் அழிக்கப்படுவதனாலும், எமது தொழிலாளர்களது வாழ்வாதாரம் முற்றுமுழுதாக கேள்விக்குறியாகக் காணப்படுகின்றது.

தடை செய்யப்பட்ட றோலர் மீன்பிடியை மீண்டும் தடை செய்து, எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழிசெய்து தாருங்கள். கடற்றொழில்; நடவடிக்கைகள் சார்பாக அரசாங்கமும், கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களமும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எமது சங்கமும் எமது மக்களும் ஒத்துழைப்பு வழங்கி வருவோம் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இரணைதீவுப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களே தற்போது, இரணைமாதா நகரில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .