2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் பரப்புக்கடந்தானில் காடழிப்பு

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசத்தின் பரப்புக்கடந்தான் கிராமத்தை அண்டிய பகுதியில் காடுகள் பெருமளவில் அழிக்கப்படுவதை உடன் நிறுத்துமாறும் அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை புதன்கிழமை (4) அமைச்சர், குறித்த வனப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.

அங்கு பெருமளவில் காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு மரங்கள் துண்டுகளாக வெட்டப்பட்டு குவிக்கப்பட்டு கிடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கட்டுக்கரை குளத்திலிருந்து வெளியேறும் மேலதிக நீரை பரப்புக்கடந்தான் காட்டு வழியாக நாயாற்றுக்கு கொண்டு செல்ல அக்கிராம மக்கள் 2011ஆம் ஆண்டு எடுத்த முயற்சியின் போது, காட்டை வெட்டினார்கள் என்று கூறி நீர்ப்பாசன பொறியியலாளர் மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு எதிராக வன வள இலாகா, மன்னார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் சட்டத்தரணியாகிய நான் அம்மக்கள் சார்பாக ஆஜராகியிருந்தேன். அங்கு வனவள இலாகா, 'இப்பிரதேசம் வனவள இலாகாவிற்குரியது. இங்கு சிறு கத்தியோடு கூட வரக்கூடாது' என்று நீதிமன்றில் தெரிவித்திருந்தேன் என்பதை இன்று குறிப்பிட விரும்புகின்றேன்.

இது இவ்வாறிருக்க அதே வனவள இலாகாவுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு பாரிய அழிவு நடந்திருக்கும் போது ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது?

வனவள இலாகாகுக்கும் இவர்களுக்கும் ஏதும் தொடர்பிருக்குமோ என சந்தேகம் ஏற்படுகின்றது. அதுமட்டுமன்றி அப்பகுதி பிரதேச செயலாளர் உட்பட அனைத்து அதிகாரிகளும் அமைதி காப்பது ஏன்? பரம்பரை பரம்பரையாக அங்கு வாழ்ந்துவரும் பரப்புக்கடந்தான் மக்களிடம் கூட இல்லாத காணி தென் பகுதியை சேர்ந்தவருக்கு வந்தது எப்படி? இதில் பெரிய ஒரு மோசடி கும்பல் இருப்பதாக உணர முடிகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பிக்கும் போது பல உண்மைகள் புலப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களிலே வன இலாகா பல தவறான விடயங்களை மேற்கொள்வதாக எம்மால் அறியப்படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அச்சங்குளம் பிரதேச மணல் அகழ்வு நடவடிக்கைக்கும் வன இலாகாவே காரணம் என அறிய முடிந்தது.

இவ்வாறாக பல திணைக்களங்கள் மக்களுக்கு தீமை விளைவிக்கக் கூடிய பல நடவடிக்கைகளை மேற்கொள்வதால், இவ்விடயத்தை மதிப்புக்குரிய நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

நீதிமன்றம் இவ்விடயம் தொடர்பாக தனது கள விஜயம் ஒன்றினை மேற்கொள்ளுமாயின் பல்வேறு உண்மைகள் புலப்படும்.

இந்தக் காடழிப்பு தொடர்பாக உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட திணைக்களத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் பின் நிற்கமாட்டேன் என அவர் அங்கு தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .