2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மனுக்கள் கையளிப்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார், ரஸீன் ரஸ்மின்


முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த முன்பள்ளி மற்றும் தொண்டர் ஆசிரியர்கள் உள்நாட்டலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவிடம் மனுவை கையளித்தனர்.


தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டதில் தவறவிடப்பட்ட 34 தொண்டர் ஆசிரியர்களே இவ்வாறு மனுவை கையளித்துள்ளனர்.  


முல்லைத்தீவு மாவட்டச் செயலக புதிய கட்டடத்திறப்பு விழா செவ்வாய்க்கிழமை(10) நடைபெற்றது. இதன்போதே அமைச்சரிடம் ஆசிரியர்கள் மனுக்களை கையளித்துள்ளனர்.


இதன்போது சிறியளவில் ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


முன்பள்ளி ஆசிரியர்கள், தாங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்பள்ளிகளில் கற்பித்து வருவதாகவும் நீண்டகாலமாக வேதனம் வழங்கப்படவில்லையெனவும் தற்போது 3000 ரூபாய் வழங்கப்படுவதாகவும் தெரிவித்ததுடன், எந்த ஒரு அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் முன்பள்ளி ஆசிரியர்களை கவனிப்பதில்லையெனவும் கூறி மனுவைக் கையளித்தனர்.


மனுக்களைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், முதற் தடவையாக முல்லைத்தீவுக்கு விஜயம் செய்திருப்பதாகவும், இந்த பிரச்சினை தொடர்பான விபரங்கள் தனக்கு தெரியவில்லையெனவும், மனுவின் அடிப்படையில் இது தொடர்பான விபரங்களை திரட்டி ஆக்கபூர்வமான பதிலை வழங்குவதாக கூறிச் சென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .