2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பறங்கியாற்றிலிருந்து வவுனிக்குளத்துக்கு நீர்: ரிசாட் நடவடிக்கை

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் பாண்டியன்குளம் ஆகிய இரு பிரதேச செயலகங்களுக்கும் உட்பட்ட பறங்கியாற்றிலிருந்து வவுனிக்குளத்திற்கு நீரைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் உறுதியளித்ததாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மகாலிங்கம் தயாநந்தன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

குறித்த இரு பிரதேச செயலகங்களுக்குற்பட்ட மக்கள் சிறுபோகம் மற்றும் பெரும் போகம் என்பவற்றை மேற்கொள்வதற்கு நிரில்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகினறனர். இதுகுறித்து குறித்த பிரதேசங்களிலுள்ள விவசாயம், கமக்கார அமைப்புக்கள், மக்கள் ஆகியோர் என்னிடம் முறையிட்டனர்.

வவுனிக்குளத்திற்கு பறங்கியாற்றிலிருந்து நீரைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அம்மக்களின் அன்பான கோரிக்கைக்கு அமைய கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

இவ்வாறு பறங்கியாற்றை மறைத்து வவுனிக்குளத்திற்கு நீரை கொண்டு செல்வதன் மூலம் 40 சிறிய குளங்களும், 2 பெரிய குளங்களிலும் நீர் நிறைந்து காணப்படும். இதனால் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 30இற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 6 ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் நன்மையடைவார்கள் எனவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

இதுகுறித்து ஜானாதிபதியுடன் நேரடியாக பேசி விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக அமைச்சர் வாக்குறுதியளித்தார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .