Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
அனைத்து மக்களுக்கும் மின்சாரத்தை 80 நாட்களுக்குள் வழங்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மின்சக்தி எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
வவுனியா நெல்லி ஸ்டார் கொட்டலில் இடம்பெற்ற வட மாகாண மின்சாரசபை அதிகரிகள் மற்றும் வட மாகாண அரசாங்க அதிபர்கள் பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய தெரிவித்த அவர்,
வட மாகாண அரசாங்க அதிபர்கள் மக்களின் தேவைகளை விரைவாக செய்து கொடுக்க முன்வரவேண்டும். குறிப்பாக அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு நான் புதிதாக இதுபற்றி கூறத்தேவையில்லை.
நாட்டில் நல்லாட்சியானது பிரதான இருகட்சிகளும் ஏனைய கட்சிகள் சிலவும் சேர்ந்து உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மக்கள் சிறந்ததொரு சுதந்திரத்தை எதிர்பார்க்கின்றனர். அது சாதாரண சுதந்திரத்தை விட பரிபூரணமான, மனதளவில் சுதந்திரத்தை அனுபவிப்பதாக அமைய வேண்டும். அது கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதிக்கு பின்னர் அதனை மக்கள் அனுபவிக்க தொடங்கியுள்ளனர்.
எமது சக்கதியை பயன்படுத்தி 80 நாட்களுக்குள் யாவருக்கும் மின்சாரத்தை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். அதற்கு மின்சாரசபை உத்தியோகஸ்தர்கள் ஒத்துழைக்கவேண்டும். குறிப்பாக வடக்கில் மாத்திரம் 28 நிலையங்கள் 80 நாட்களில் பூரணப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் கோரியுள்ளனர்.
எனவே, நாமும் இரவு பகல் பாராது மார்ச் மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மக்கள் பயன்பெற செய்வோம்.
மின்சாரசபைக்கு ஒபப்ந்தக்காரர்களின் ஒத்துழைப்பு முக்கியமானதாகும். ஒப்பந்தக்காரர்கள் பல்வேறான சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிகின்றது. எனவே நாம் பொலிஸாரிடம் ஒத்துழைப்புகளை கேட்டு அவர்களிடம் உள்ள வசதிகளை பயன்படுத்தி மிக விரைவாக மின்சாரத்தை வழங்கும் செயற்பாடுகளையும் முன்னெடுப்போம்.
எமக்கு குறுகிய காலத்தில் பாரிய இலக்கை அடையவேண்டியுள்ளது. எனவே அதற்கு அனைவரதும் ஒத்துழைப்பும் ஆசிகளும் தேவையானதாகவுள்ளது.
கடந்த காலங்களில் எண்ணை விலையை குறைக்கமுடியாது என தெரிவித்து வந்தார்கள். எனினும் எமது அரசாங்கம் பதவியேற்று 7 நாட்களில் எல்லோரும் அறியக்கூடிய வகையில் எண்ணை விலையை குறைத்தோம். மீண்டும் நாம் எண்ணை விலையை குறைப்போம். அதனூடாக மக்கள் பல பலன்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிபோம் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago