Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2015 பெப்ரவரி 17 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தர சுவாமி (வயது-67)இன்று செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.
புற்று நோயினால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். வவுனியா தனியார் வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கிராம சேவையாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற பின்னார் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம் பெற்ற வடமாகாண சபைக்கான முதலாவது தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின்; சார்பில் போட்டியிட்டு வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.
கடந்த காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பொது அமைப்புக்களின் ஊடாக பல்வேறு சமூக சேவைகளையும் மேற்கொண்டு மக்களின் நன்மதிப்பையும் கௌரவத்தையும் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது இறுதி கிரிகைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
24 minute ago
31 minute ago