2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

20 ஆசனங்களுக்காக 162பேர் போட்டி

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவின் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச சபைகளின் 20 ஆசனங்களுக்காக 162 பேர் தேர்தலில் போட்டியிடுவதாக முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ராஜேந்திரா சசீலன் வியாழக்கிழமை (19) தெரிவித்தார்.

இரண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது. 11 ஆசனங்களைக் கொண்ட கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு 90பேர் போட்டியிடுகின்றனர். இந்த பிரதேச சபையில் 29,279 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

09 ஆசனங்களைக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு 72பேர் போட்டியிடுகின்றனர். இந்த பிரதேச சபையில் 23,559 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இரண்டு பிரதேச சபைகளுக்கும் தலா 6 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுவொன்றும் போட்டியிடுகின்றன.

கரைதுறைபற்றில் தமிழரசுக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி, ஐக்கிய தேசியக்கட்சி,  பிரஜைகள் முன்னனி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) புதுக்குடியிருப்பில் தமிழரசுக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி, ஐக்கியதேசியக் கட்சி, நவசமாசக்கட்சி, பிரஜைகள் முன்னணி, சுயேட்சை குழு ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

கரைதுறைபற்றில் 50 வாக்களிப்பு நிலையங்களும், புதுக்குடியிருப்பில் 45 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .