2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கண்டாவளை பிரதேச செயலகத்தின் புதிய கட்டடம் உரிய இடத்தில் அமைக்கப்படும்

Kogilavani   / 2015 பெப்ரவரி 19 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தின் புதிய கட்டடம் உரிய இடத்தில் அமைக்கப்;படுவதற்கு இந்த ஆண்டிலிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் வியாழக்கிழமை (19) தெரிவித்தார்.


கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 4 பிரதேச செயலகம் அமைந்துள்ளதுடன், அவற்றில் 3 பிரதேச செயலகங்களுக்கு புதிய கட்டடங்களில் இயங்கி வருகின்ற போதும், கண்டாவளை பிரதேச செயலகத்துக்கு நிரந்தர கட்டடம் இதுவரையில் அமைக்கப்படவில்லை. இதனால் பல்வேறு இட நெருக்கடிகளுக்கும் மத்தியில் இந்த பிரதேச செயலகம் இயங்கி வருகின்றது.


பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவு ஓர் இடத்திலும் ஏனைய நிர்வாகக் கிளைகள் வேறொரு இடத்திலும் இயங்கி வருகின்றன.


தற்போது பிரதேச செயலகம் அமைந்துள் காணி, பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான காணியாகவும் வருடாந்தம் வெள்ளத்தில் மூழ்கும் பகுதியாகவும் இருக்கிறது.


இதனால் குறித்த இடத்;தில் பிரதேச செயலகத்தின் நிரந்தரக்கட்டடம் அமைக்கமுடியாத நிலை காணப்பட்டதனால் வேறு இடத்திலுள்ள பொது காணியொன்றில் நிரந்தர கட்டடம் அமைப்;பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோதும், அதற்கான தடைகள் ஏற்பட்டமையால் புதிய கட்டடம் அமைப்பதற்கான நிதி கடந்த ஆண்டில் திறைசேரிக்கு திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .