2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விவசாயிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல் கொள்வனவு

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

அரசினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு ஏற்றவாறு சந்தைப்படுத்தல் சபையில் தங்களது நெல்லை விவசாயிகள்  கொடுக்க முடியும் என வடமாகாண நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய முகாமையாளர் எஸ்.சாந்தகுமார வியாழக்கிழமை (19) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் நெல் உற்பத்திகளை அரச விலை நிர்ணயத்திற்கு அமைவாக கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள்; கிளிநொச்சி மாவட்ட நெல் சந்தைப்படுத்தும் சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இச் சந்தைப்படுத்தலின் ஆரம்ப நிகழ்வு  கிளிநொச்சி கனகபுரம் அம்பாள்குளம் பொருளாதர மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையில் வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சந்தைப்படுத்தல் சபையில் சிவப்பு நாடு, வெள்ளை நாடு கிலோ 40 ரூபாயாக ஒருமூடை நெல் 2,800 ரூபாய்க்கும் சம்பா கிலோ 45 ரூபாய் வீதம் ஒரு மூடை நெல் 3,150 ரூபாய்க்கும் கீரிசம்பா கிலோ 50 ரூபாய் வீதம் ஒரு மூடை 3,500 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படுகின்றது.

இதனால் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் தங்களது நெல்லை  நெல் சந்தைப்படுத்தல் சபையில் கொடுப்பதில் ஆர்வம் காட்டிகாட்டி வருகிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .