2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'எங்கள் மண்ணிலிருந்து எங்களை அகற்ற எம்மவரே கைக்கூலியா இருந்தார்கள்'

Gavitha   / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

எங்களை எங்கள் மண்ணில் இருந்து அகற்ற எங்கள் மக்கள் சிலரே கைக்கூலியாக இருந்தார்கள் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா பண்டாரிகுளம் விபுலாநந்தாக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி வெள்ளிக்கிழமை (20) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவத்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந்த பாடசாலையில் பௌதீக வளங்கள் போதியளவில் இல்லை. ஆனால் ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை அபிவிருத்தி செய்வதாக கூறியவர்கள் அலரிமாளிகையையே அபிவிருத்தி செய்துள்ளனர்.

எங்களுடைய பணத்தையே அவர்கள் சூறையாடி கொண்டு சென்று வைத்திருந்தார்கள். போர் முடியும் காலத்தில் எங்கள் மக்களுடைய பணத்தையும் நகைகளையும் கொள்கலன்களில் சூறையாடினார்கள்.  ஆனால் எங்களுடைய சிறார்களுக்கு படிப்பதற்கு கூட கட்டடம் கிடையாது.

இவற்றுக்கெல்லாம் யார் உடந்தையாக இருந்தார்கள். எங்களை எங்கள் மண்ணில் இருந்து அகற்றுவதற்கு, எங்களுடைய மக்கள் சிலரே அரசாங்கத்துடன் கைக்கூலிகளாக இருந்து வந்தார்கள். இன்று இந்த கைக்கூலிகளை முற்றாக ஒழிப்பதற்கு நாங்கள் முன்வருகின்றோம். இவர்களால் தான் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். இவர்களின் வழிகாட்டலில் தான் தெற்கில் இருந்து அரசாங்கம் வந்து எம்மை தாக்கியது. ஆகவே, இந்த சொற்ப ஆசைக்காக துணை போகாது எமக்காக செயற்படவேண்டும் என்று தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .