Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
எமது போசாக்கு தேவையை நிறைவு செய்யக்கூடிய சத்துணவுகளை நாங்களே உற்பத்தி செய்து உணவு தேவைகளுக்கு பயன்படுத்தவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அ.செல்வராசா தெரிவித்தார்.
கிளிநொச்சி இரணைமடு நீர்ப்பாசனத்திட்டத்தில் இபாட் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஒன்றாக காணப்படும் உப உணவுச் செய்கையின் சோளச் செய்கை அறுவடை விழா, சனிக்கிழமை (21) இராமபுரத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில், கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் நெற்செய்கையை மேற்கொண்டு நெல் அறுவடை மேற்கொள்ளப்;பட்ட பின்; மறுவயல் பயிர்ச்செய்கை மேற்;கொண்டு விவசாயிகள் நன்மையடைய முடியும். பரீட்சார்த்தமாக கடந்த ஆண்;டிலேயே இவ்வாறான செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியளித்தது.
கிளிநொச்சி மாவட்டம் கடந்த காலங்களில் போசாக்கு குறைவாகக்; காணப்படுவதாக புள்ளி விபரங்கள் மூலம் அறிய முடிகின்றது. இவவாறு நெல்வயல்களில் மறுவயல் பயிர்;களை மேற்கொண்டு எமக்கு போசாக்கான உணவுகளை உற்பத்தி செய்து அவற்றை உணவாக சேர்த்து போசாக்குள்ள சமுதாயமாக உருவாக முடியும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
4 hours ago