2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தனியார் பயணிகள் பஸ் மீது கல்வீச்சு

Sudharshini   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ்ஸின் மீது ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் வைத்து இன்று (23) அதிகாலை 1.30 மணியளவில் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதலில் காயமடைந்த நிலையில் ஒருவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தனியார் பஸ் ஆராச்சிக்கட்டு பிரதேச சபைக்கு அருகில் வந்துகொண்டிருந்த போது, அங்கு நின்றுக்கொண்டிருந்த சில இனம்தெரியாத நபர்கள், பஸ்ஸின் மீது கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பஸ்ஸின் சாரதி சிலாபம் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் காரணமாக பஸ்ஸின் முன்கண்ணாடி சேதமடைந்துள்ளதெனவும் சாரதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் சிலாபம் வழியான தூரப்பிரதேச தனியார் பயணிகள் பஸ் மீது மாதம்பை, மஹவௌ போன்ற பிரதேசங்களில் வைத்து இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .