2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நியாய விலையில் நெல் கொள்வனவுக்கு வவுனியா விவசாயிகள் கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கமானது விவசாயிகளிடமிருந்து நியாய விலையில்  நெல் கொள்வனவு செய்யவேண்டும் என்று  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறுவடை செய்யப்பட்டதும் கடன் அடைப்பதற்காக நெல்லை உடனடியாக விற்பனை செய்யவேண்டிய தேவை விவசாயிகளுக்கு உள்ளது. எனினும், நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல்லை எவரும் கொள்வனவு செய்யாத நிலையுள்ளது. களஞ்சிய வசதி இன்மையால் தனியாருக்கு குறைந்த விலையில்  நெல்லை விற்பனை செய்யவேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்; தலைவரிடம் கேட்டபோது, 'வவுனியா மாவட்டத்தில் வருடாந்தம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்காக அரசாங்க அதிபரினால் பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்களுக்கு வழங்கப்படும் பணம், இம்முறை வழங்கப்படாமையே நெல் கொள்வனவு செய்யப்படவில்லை.

கடந்தமுறை அரசாங்க அதிபரினால் 85 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டு நெல் கொள்வனவு செய்யப்பட்டதுடன், அந்த நிதி மீள்செலுத்தப்பட்டு மீண்டும் 10 மில்லியன் ரூபாய் பெறப்பட்டு நெல் கொள்வனவின் பின்னர் மீள்செலுத்தப்பட்டது.

எனினும், இம்முறை நிதி வழங்குமாறு நாம் கோரியுள்ள நிலையிலும் இதுவரை நிதி வழங்கப்படவில்லை. நாம் நெல்லை கொள்வனவு செய்யும் பட்சத்தில் அவற்றை களஞ்சியப்படுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம்.  நிதி தரும் பட்சத்தில் எமது விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய தயாராக உள்ளோம்' என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .