2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

புதிய குடியிருப்பு மக்களுக்கு குழாய் கிணறு

George   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேசத்தின், புதிய குடியிருப்பு பகுதியில் மனித நேயம் அமைப்பால் 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் குழாய்க் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதி மக்கள், கடந்த 9 வருடங்களாக குடிநீர்ப் பிரச்சினையை எதிர்கொண்டு வந்தனர். இதற்காக ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள இடங்களுக்கு சென்று மக்கள் நீரைப் பெற்று வந்தனர். மக்கள் வசிக்கும் காணிகளில் கிணறுகளும் இல்லை.

இதனைக் கருத்தில் கொண்டு மனித நேய அமைப்பால் குழாய் கிணறு அமைக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை (24) மக்கள் பாவனைக்கு விடப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .