Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 பெப்ரவரி 26 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி, புதன்கிழமையும்(25) தொடர்ந்து இடம்பெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா, வியாழக்கிழமை (26) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், முல்லைத்தீவில் கொக்குளாய் தொடக்கம் நல்லதண்ணீர் தொடுவாய் வரையான எமது சமாச எல்லைப் பரப்பில் 26 சங்கங்கள் உள்ளன. சங்கங்களில் 6000 குடும்பங்கள் கடற்றொழிலையே நம்பி வாழ்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு சென்ற நாளில் இருந்து இந்திய றோலர்களின் அத்துமீறல் இங்கு அதிகரித்துள்ளது. நேற்றும் (புதன்கிழமை) கரையிலிருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் இந்திய றோலர்கள் அத்துமீறி மீன் பிடித்தன.
முல்லைத்தீவு மாவட்டச் செயலக கட்டடத்தை திறந்து வைக்க கடந்த 10 ஆம் திகதி வருகை தந்த உள்நாட்டலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் யோசப் மைக்கல் பெரேராவிடம் இந்திய றோலர்களின் நெருக்கடி தொடர்பாக மனு கையளித்தோம்.
3 நாளில் தனது செயலாளரை அனுப்புவதாக அமைச்சர் உறுதியளித்திருந்தார். ஆனால் இன்றுவரை செயலாளர் வருகை தரவில்லை. அமைச்சரிடமிருந்தும் தகுந்த பதில் கிடைக்கவில்லை.
மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளரிடம் இந்திய றோலர்களை கட்டுப்படுத்துவதற்கு தகுந்த நடவடிக்கை எடுங்கள் என வலியுறுத்தியுள்ளோம்.
எதிர்வரும் 28 ஆம் திகதி கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு சபைகளின் தேர்தல் நடைபெறவுள்ளமையால் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்துவதற்கும் முடியாதுள்ளது.
கடற்றொழிலாளர்களின் நெருக்கடி நிலைக்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் ஆகியோர் விரைவான தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
15 minute ago