Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Administrator / 2015 பெப்ரவரி 26 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வெகு விரைவில்; மருதங்கேணியில் இருந்து யாழுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா பொது வைத்தியசாலையில் 37 இலட்சம் ரூபாய் பெறுமதியில் தியாகி அறக்கட்டளை அமைப்பால் உருவாக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
'இன்னுமொரு 60 அல்லது 70 வருடங்களில் நீர் பற்றாக்குறை உலகத்தை பாதிக்கும். மாசடைந்த நீரை பயன்படுத்தும் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய கடப்பாடு உண்டாகும். நீரற்ற நிலை ஒருபுறம் நீரிருந்தும் மாசுற்ற நிலை மறுபுறம் என்று, சுமார் 50 அல்லது 60 வருடங்களுக்கு முன்னர் ஒரு ஆங்கில சஞ்சிகையில் நான் வாசித்த ஞாபகம் இருக்கின்றது.
அக்காலத்தில் நீரை சுத்தமாகவும் சுவையாகவும் அருந்தக்கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது, மாசடைவதை தடுக்க மாபெரும் இயந்திரங்களை நாடவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
அன்று சஞ்சிகையில் குறிப்பிட்ட கருத்து உண்மையில் இங்கு உருவாகியுள்ளது.
யாழ். மக்களுக்கு, கடலில் இருந்து மருதங்கேணியூடாக பளைக்கும் அங்கிருந்து குழாய்களின் மூலமாக யாழ்ப்பாணத்துக்கும் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.
கடல் நீரை நன்னீராக்க மருதங்கேணியிலும் பளையிலும் இயந்திரங்கள் பொருத்தப்படவிருக்கின்றன. எனவே, இயந்திரயுகம் இப்பொழுது அண்டியுள்ளது. இன்றைய திறப்பு விழாவும் அவ்வாறான இயந்திர யுகத்தை பிரதிபலிப்பதாய் அமைந்துள்ளது. 35 இலட்சம் ரூபாய் செலவில் 5 வருட பராமரிப்பு பொறுப்பையும் ஏற்று தியாகி அறக்கட்டளை நிறுவனம் இந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
வறுமையுற்ற மாணவர்களின் கல்வியை உயர்த்தவும் யாருமில்லாது வாழும் குடும்பங்களுக்கு நன்மைகளைப் பெற்றுத்தரவும் ஊனமுற்றோரைப் பராமரித்து உதவிகளைச் செய்யவும் பாதிப்படைந்திருப்போருக்கு நிவாரணங்களை வழங்கி வாழ்க்கையில் வளம் பெற ஆவன செய்யவும் வேறு பல செயற்பாடுகளில் ஈடுபடவும், தியாகி அறக்கட்டளை நிறுவனத்தார் முயன்று வருகின்றனர்.
அவர்களின் சேவைகளை பாராட்டுகின்றோம். வாழ்க்கையில் வசதி படைத்த எமது சகோதர சகோதரிகள், அவர்கள் போன்று மேலும் பாதிப்புற்ற எமது மக்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்று கேட்டுகொள்ளுகின்றேன் என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
26 minute ago