Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்
யுத்தத்தால் பல ஆண்டு காலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக இன, மத அரசியல் பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முன்வர வேண்டும் என வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் சங்கம் ஆகியவற்றுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (27) நடைபெற்றபோது, உபகரணங்களை வழங்கிய பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் பல பேதங்கள் இருக்கலாம். மக்களுக்கான தேவைகள் நிறைவேற்றும் போது அதனை மறந்து தேவைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்றார்.
25 பேருக்கு தலா ஒவ்வொரு தையல் இயந்திரங்களும், 6 மாதர் சங்கங்களுக்கு சமையல் பாத்திரங்களும், தளபாடங்கள், அலுவலக உபகரணங்கள் என 1 மில்லியன் ரூபாய் பெறுமதியிலான உபகரணங்கள் இந்நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான வை.தவநாதன், சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
24 minute ago
31 minute ago