2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் விபத்தில் பெண் காயம்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மார்க் ஆனந்த்

தோட்டவெளி கிராமத்திலிருந்து மன்னார் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்;.

இன்று வெள்ளிக்கிழமை பகல் 2 மணியளவில் குறித்த விபத்து மன்னார், மரியன்னை கோவிலுக்கு முன் நடைபெற்றுள்ளது. தோட்டவெளி கிராமத்திலிருந்து தலைமன்னார் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த பஸ்; விபத்துக்குள்ளாகும் போது இரண்டு பயணிகள் இருந்துள்ளனர்.

குறித்த பஸ் பயணித்து கொண்டிருக்கையில் மரியன்னை ஆலயத்திற்கு முன் பஸ்ஸின் ரொட் உடைந்ததால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி மரி அன்னை கோவிலின் சுவரை உடைத்து சென்று அங்குள்ள கட்டிடத்தில் மோதி விபத்து நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த பஸ்சில் பயணித்த பயணி ஒருவரே பஸ்ஸுக்குள் வீசப்பட்ட நிலையில் சிறு காயத்திற்குள்ளாகி மன்னார் வைத்தியசாசையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .