2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் ஒத்திவைப்பு எமக்கு கிடைத்த வெற்றி: புத்திஜீவிகள் ஒன்றிய ஏற்பாட்டாளர் தெரிவிப்பு

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைகளுக்குமான தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட எமக்கு கிடைத்த வெற்றியாகும் என்று புத்திஜீவிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஏ.மபூஸ் அஹமட் தெரிவித்தார்.
 

புதிய வேட்புமனுத்தாக்கலுக்கான அழைப்பை விடுத்து மீளவும் தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையாளருக்கு உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை பரிந்துரை செய்துள்ளது இது தொடர்பில்  கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த இரு பிரதேச சபைகளுக்குமான தேர்தலை நிறுத்துமாறு புத்திஜீவிகள் ஒன்றியம் மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனு  மீதான விசாரணை நேற்று வெள்ளிக்கிழமை, உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

பழைய வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளதால் புதிதாக தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இனிவரும் 2019ஆம்  ஆண்டே தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பமும் கிடைக்கும்.

எனவேதான் குறித்த தேர்தலை இடைநிறுத்திவிட்டு புதிய வேட்புமனுத்தாக்கல் செய்து மீளவும் தேர்தலை நடத்துமாறு கோரி உயர்நீதின்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த முயற்சி வெற்றியளித்துள்ளது.  புதிய வேட்புமனுத்தாக்கல் செய்து மீளவும் தேர்தலை நடத்துமாறு உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையாளருக்கு பரிந்துரை செய்துள்ளது. இது புதிய வேட்பாளர்களுக்கு பெரும் நன்மையாக அமையும் என நம்புகிறோம்.

இந்த தேர்தலில் போட்டித் தன்மை குறைவாகும். பல வேட்பாளர்கள் போட்டியிடவில்லை என்பதால் ஒரு கட்சிகளே கூடுதலான ஆசனங்களை பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. எனவே, இது நீதியான தேர்தலாக அமையாது என்பதையும் சொல்ல விரும்புகிறோம்.

தேசிய அரசாங்கத்தில் எல்லாக்கட்சிகளும் ஒன்றினைந்து எப்படி நல்லாட்சியை நோக்கி பயணிக்கிறதோ அதுபோல புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேச சபைகளிலும் நல்லாட்சி மலர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .