2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

உழவு இயந்திரப்பெட்டியில் சிக்கி வவுனியா பிரதேச சபை உறுப்பினர் மரணம்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா வடக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  உறுப்பினரும் மாறாவிலுப்பை கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவருமான இளையகுட்டி கேதீஸ்வரன் (வயது 42) உழவு இயந்திரப்பெட்டியின் கீழ் சிக்குண்டு சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.

மாறாவிலுப்பையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்த இவர், மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.

நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்று  தனது வீட்டில் பறிப்பதற்கு முற்பட்டபோது, உழவு இயந்திரப்பெட்டியின் பம் சீராக வேலை செய்யவில்லை. இந்த நிலையில்,  பெட்டியின் கீழ் சென்று அதை சரி செய்ய முற்பட்டபோது, பெட்டியின் டிப்பர் பம் வெடித்த நிலையில்  உழவு இயந்திரப்பெட்டி அவர் மீது விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .