2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மன்னார்-யாழ்ப்பாணம் தனியார் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதம்

Gavitha   / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சேவையில் ஈடுபடும் மன்னார் தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்துக்கு செந்தமான பஸ்களின் உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையினால்,  வெள்ளிக்கிழமை (27) மதியம் முதல் யாழ். செல்லும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சேவையில் ஈடுபட புதிதாக அனுமதிப்பத்திரம் வழங்கியதன் காரணத்தினாலேயே குறித்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அனுமதிப்பத்திரம் வழங்கியதில் முறைக்கேடுகள் காணப்படுவதாகவும் மன்னார் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

புதிதாக அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்ட தனியார் பஸ்  உரிமையாளர் ஒருவரும் மேலும் சிலரும் வெள்ளிக்கிழமை (27) காலை முதல் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணிகள் சேவையை மேற்கொண்டிருந்தனர்.

அதில் பஸ் உரிமையாளர் ஒருவர் இலாப நோக்குடன் பல தடவைகள் தனது போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை அடிக்கடி மாற்றி சேவையில் ஈடுபடுவதினால் ஏயை மன்னார்-யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் பஸ்  உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, குறித்த செயற்பாடுகளை கண்டித்தும் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யவும் கோரி மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான மன்னார் தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது இந்த பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .