Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணிகள் சேவையில் ஈடுபடும் மன்னார் தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்துக்கு செந்தமான பஸ்கள் வெள்ளிக்கிழமை (27) மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு சனிக்கிழமை (28) 02ஆவது நாளாகவும் தொடர்ந்துள்ளது.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சேவையில் ஈடுபட புதிதாக அனுமதிப்பத்திரம் வழங்கியதன் காரணத்தினாலேயே, குறித்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அனுமதிப்பத்திரம் வழங்கியதில் முறைக்கேடுகள் காணப்படுவதாகவும் தெரிவித்து மன்னார் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை (27) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சேவையில் ஈடுபடும் 13 தனியார் பஸ்களின் உரிமையாளர்கலே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பின் போது, வெள்ளிக்கிழமை (27) மாலை வரை அவர்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை (28) காலை முதல் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.
இதனால் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பிரதான வீதியூடாக பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் இலாப நோக்குடன் பல தடவைகள் தனது போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை அடிக்கடி மாற்றி சேவையில் ஈடுபடுவதினால் ஏனைய மன்னார்-யாழ் சேவையில் ஈடுபடும் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, குறித்த செயற்பாடுகளை கண்டித்தும் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யவும் கோரியும் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்புக்கு இது வரை உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என மன்னார் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, மன்னார் தனியார் போருந்து உரிமையாளர் சங்கத்துடன் உரிய முறையில் கலந்துரையாடாது இன்று (28) மதியம் முதல் அரச பஸ்களை அதிக அளவில் யாழ்ப்பாணத்துக்கு சேவையில் ஈடுபட வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் பணிப்புரை விடுத்துள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம் என மன்னார் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
உரிய முடிவு கிடைக்காது விட்டால் மன்னார் மாவட்ட ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என மன்னார் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
5 hours ago