2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'முழு நாடும் ஒளி பெறுகிறது' எனும் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு

Sudharshini   / 2015 மார்ச் 01 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 'முழு நாடும் ஒளி பெறுகிறது' என்ற வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் கரிசல் கிராமத்துக்கான மின் விநியோகத்தை கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதின் வெள்ளிக்கிழமை (27) ஆரம்பித்து வைத்தார்.

வடக்கின் வசந்தம் மின்சார திட்டத்தினூடாக இதற்கான நிதிஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மின்சாரமற்ற அனைவருக்கும் மின்சாரத்தை வழங்கும் அரசின் திட்டத்துக்கு அமைவாக இக்கிராமத்துக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மன்னார் நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன், தொழிலதிபர் எஸ்.கே.பீ.அலாவுதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .