Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 02 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கற்குளம் படிவம் 1, 2, 3 ஆகிய கிராமங்களில் வீட்டுத்திட்டம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி அக்கிராமங்களை சேர்ந்த மக்கள் திங்கட்கிழமை (2) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், வவுனியா கோவில்குளம் சந்தியிலிருந்து வவுனியா மாவட்ட செயலகம்வரை ஊர்வலமாக வந்த சுமார் 200 இற்கும் மேற்பட்டவர்கள், மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நலன்புரி நிலையங்களில் வாழ்ந்த மக்களை கற்குளம் பிரதேசத்தில் குடியேற்றியபோது சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அரை நிரந்தர வீடுகள் முற்றாக சேதமடைந்த நிலையில், மக்கள் வாழமுடியாத சூழலில் நிரந்தர வீட்டுத்திட்டத்தில் தாம் புறக்கணிக்கப்படுவதாக ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
தங்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், தமது பிரதேசத்துக்கான வீதிகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் இந்த மக்கள் தெரிவித்தனர்.
'தாம் வாழும் கிராமத்தின் பதிவை உறுதிப்படுத்துங்கள்', 'மக்கள் வசிக்கக்கூடிய வீடுகளை அமைத்து தாருங்கள்', 'எமது கிராமத்துக்கான வீதிகளை புனரமைத்து தாருங்கள்', 'அபிவிருத்தி திட்டங்களில் எம்மையும் இணைத்துக்கொள்ளுங்கள்' போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரிலிங்கநாதனும் கலந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago