2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 02 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர்  ரூபவதி கேதீஸ்வரன் தெரிவிக்கையில்,  

"ஆலயத்துக்கு  செல்லும் பக்தர்களின்  நலன் கருதி பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிளை  அங்கு அமைக்கப்படவுள்ளது. கடல் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற படகுகளில் பக்தர்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள்  மேற்கொள்ளப்படும்.

பக்தர்கள் தங்கள் தேவைக்கு  போதுமானளவு குடிநீரை தாங்களே கொண்டுசெல்ல வேண்டும். தங்கநகைகள் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருட்கள்  கொண்டுசெல்வதை தவிர்க்கவேண்டும்.

பச்சை குத்துதல், சர்பத்  தயாரித்து விற்பனை செய்தல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஆலய புனித பிரதேசத்துக்கான ஒழுங்குமுறைகளை பின்பற்றி சுத்தமாக வைத்திருக்கவேண்டும். அத்துடன், பொதுச் சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தல்களை பின்பற்றவேண்டும்.

அறிவுறுத்தல்களை செவ்வனே பின்பற்றி திருவிழர் சிறப்பாகவும் அமைதியாகவும்  நடைபெற  பூரண ஒத்துழைப்பை நல்கவேண்டும்' என கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .