2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மீள்குடியேற்றம்...

Kogilavani   / 2015 மார்ச் 03 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் கிராம மக்களை மடு, பூமலர்ந்தான் கிராமத்தில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மடு பிரதேசச் செயலாளர் எஸ்.சத்தியசோதி செவ்வாய்க்கிழமை(3) தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


தம்பனைக்குளம் கிராமத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக அக்கிராமம் வெள்ளத்தில் மூழ்குவதோடு அக்கிராமத்தைச் சேர்ந்த 364 குடும்பங்கள் தொடர்;ந்தும் பாதிக்;கப்பட்டு வருகின்றனர்.


இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் எவ்வித தொழில் வாய்ப்புக்களையும் மேற்கொள்ள முடியாத நிலையில் முடங்கியுள்ளதோடு ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கினால் அவர்கள் வளர்க்கின்ற கால்நடைகளும் உயிரிழக்கும் நிலை ஏற்படுகின்றது.


இம்மக்களின் நலன் கருதி மடு பிரதான வீதியில் உள்ள பூ மலர்ந்தான் கிராமத்தில் காடுகளை வெட்டி அக்கிராம மக்களை மீள்குடியேற்ற முடிவெடுக்கப்பட்டது.


இந்த நிலையில் தம்பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 273 குடும்பங்கள் தமது சுய விருப்பத்தில் பூ மலர்ந்தான் கிராமத்தில் மீள் குடியேறுவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தனர்.


இவர்களுக்கு, பூ மலர்ந்தான் கிராமத்தில் மடு பிரதேசச் செயலாளரினால் காணிகள் அளவீடு செய்யப்பட்டு வளங்கப்பட்டுள்ளது.


இம்மக்கள் தற்போது தற்காலிக வீடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களில் 100 குடும்பங்களுக்கு லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் திங்கட்கிழமை(2) தற்காலிக வீடு அமைப்பதற்கான கூரைத்தகரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .