2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'மன்னாரில் புண்ணிய கிராமம் 2015' ஆரம்பம்

Kanagaraj   / 2015 மார்ச் 03 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மன்னார் நானாட்டன் மடுக்கரையில் நானாட்டான் பிரதேச சபைத்தலைவர் எஸ்.பரமதாசனின் தலைமையில் புண்ணிய கிராமத்திட்டம் - 2015 கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

நடனங்கள், சமய சொற்பொழிவுகள், அன்னதானம் என்பன இடம்பெற்றன. நவசக்தி இந்து இளைஞர் மன்றம் மற்றும் நலிவுற்றோர் நலன் காப்பு நிதியம் என்பனவற்றின் இணை அணுசரனையுடன் இடம்பெற்றிருக்கும் குறித்த நிகழ்வில் காத்தவராயன் கூத்தும் இடம்பெற்றது.  

கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு மீண்டும் இவ்வருடம் குறித்த 'புண்ணிய கிராமம்' நிகழ்வு இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகிறது.  

வளர்ந்து வரும் கிராமங்களின் அறநெறி, சமய, சமூக, மற்றும் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை சிறுவர், இளைஞர், யுவதிகள் மற்றும் பெரியவர்களிடையே ஆழப்படுத்துவதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .