2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் 6,213 தொழில் நிறுவனங்கள்

George   / 2015 மார்ச் 04 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

2009ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முதல் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்றத்தின் பின்னர் இதுவரையில் மாவட்டத்தில் கைத்தொழில், வணிக சேவை வழங்கும் 6,213 நிறுவனங்கள் உள்ளதாக மாவட்டச் செயலக புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்டத்தில் 1,081 கைத்தொழில் நிறுவனங்களும், 5,132 வணிக சேவை நிறுவனங்களும் உள்ளன.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 557 கைத்தொழில் நிறுவனங்களும், 2,761 வணிக சேவை வழங்கும் நிறுவனங்களும், கண்டாவளை பிரதேச செயலாளர்; பிரிவில் 158 கைத்தொழில் நிறுவனங்களும், 822 வணிக சேவை நிறுவனங்களும் உள்ளன.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 136 கைத்தொழில் நிறுவனங்களும், 559 வணிக சேவை நிறுவனங்களும், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 230 கைத்தொழில் நிறுவனங்களும், 990 வணிக சேவை நிறுவனங்களும் அமைந்துள்ளன என அந்த புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .