2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஆரோக்கியபுரம் பாலம் புனரமைப்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 04 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, ஆரோக்கியபுரம் பகுதியில் அமைந்துள்ள பாலம் 1.6 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்புப் பணிகள் கடந்த வாரம் முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதம பொறியலாளர் வல்லிபுரம் ஜெயானந்தன் புதன்கிழமை (04) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

கிளிநொச்சி அக்கராயனிலிருந்து வன்னேரிக்குளம் செல்லும் வீதியில் துணுக்காயின் பாலங்குளத்தின் வான் பாயும் பகுதியில் இந்தப் பாலம் அமைந்துள்ளது. மழைவெள்ளத்தால் சேதமடைந்த இந்தப் பாலம் போக்குவரத்து இடையூறாகவிருந்தது.

இந்தப் பாலம் சேதமடைந்ததன் காரணமாக, கிளிநொச்சியிலிருந்து முழங்காவிலுக்கான பஸ் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து மேற்கொள்ள முடியாதிருந்தது.

இதனைக் கருத்திற்கொண்டு வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால், விரைவான புனரமைப்புப் பணிகளில் தற்போது முன்னெடுக்கப்படுவதா அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .